மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட்-அலர்ட்: வானிலை ஆய்வு மையம்!

வியாழன், 25 நவம்பர் 2021 (17:39 IST)
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்யும் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக வெளியான செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.
 
இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில மணி நேரங்களாக நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக அந்த இரண்டு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்திற்கு கானம் மிக பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்பதும் தூத்துக்குடி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி கடலூர் அரியலூர் குமார் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்