திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட்அலர்ட்.. அதிகனமழை பெய்யும் என அறிவிப்பு..!

வெள்ளி, 1 டிசம்பர் 2023 (13:46 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி அதிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
வங்க கடலில் தோன்றியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சற்றுமுன் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் நான்காம் தேதி அதிக கன மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. 
 
மேலும் சென்னைக்கு 780 கிமீ கிழக்கு தென்கிழக்கில் காற்றழுத்து தாழ்வு மண்ட மையம் கொண்டுள்ளதால் டிசம்பர் 3ல்உருவாகும் புயல் 4ஆம் தேதி சென்னை மசூலிப்பட்டினம் இடையே கரையை கடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்