ஊழல் பட்டியலை வெளியிட தயார்: பா.மா.க தலைவர் ராமதாஸ்...

வியாழன், 11 அக்டோபர் 2018 (16:35 IST)
இந்தியாவுக்கு  சுதந்திரம் கொடுத்து விட்டு ஆங்கிலேயர் சென்ற பின்பு பலமுறை நம் நாடு ஆட்சி மாற்றம் கண்டிருக்கின்றது. ஆனால் எல்லா ஆட்சியிலுமே ஊழல்கள்தான் மிகுந்துள்ளதோ என்று சொல்லும் படிக்கு பலகாலகட்டத்தில் நடந்த ஊழல்களைப் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் பலர் கூறி வந்துள்ளனர்.
இந்நிலையில் எந்த கட்சி ஆட்சியில் இருந்து ஆண்டு அனுபவித்து விட்டு போனாலும் அடுத்து வரபோகிற அரசானது முந்தையா ஆட்சியின் ஊழல் குற்றசாட்டைக் கண்டுபிடிப்பதிலும் அதை வெளிக்கொணர்வதிலும்,(அப்படி ஒரு வேளை குற்றசாட்டு  இல்லையென்றால் பழிவாங்குவதிலும்)வழக்கு தொடர்வதிலுமே தன் ஆட்சிக்காலம் மொத்தத்தையும் செலவழிக்கிறது. இது வாடிக்கையாகவும் ஆகிவிட்டது.
 
தற்போது தமிழகத்தில் நிகழ்ந்து வரும் அரசியல் நிலவரங்களே இதற்கு உதாரணம்.
இந்நிலையில் ஆட்சி ,அதிகாரம் கோலோட்சும்போது கிடைக்கும் துறைகளில் எல்லாம் ஊழல் மலிந்து விட்டாலும் கல்வித்துறையிலும் இந்த அக்கிரமம் அரங்கேறியுள்ளதுதான் கொடுமையிலும் கொடுமை.
 
அதனையடுத்து  பா.ம.க. தலைவர் ராமதாஸ் 21 பல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல் பட்டியலை வெளியிட தாயார் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.
 
மேலும் இந்த 21 பல்கலைகழகங்களில் நடந்த ஊழல்களையும் பாமக விரிவாக தொகுத்திருக்கிறது.மாநில கவர்னர் எங்களை அழைத்து இது பற்றிக்,கேட்டால் எப்போது வேண்டுமானாலும் இதுபற்றிய பட்டியலை அளிக்க தாயார் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்