தமிழகத்தில் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதலாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல மாதங்கள் ஊரடங்கு நீடித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததுடன், பொருளாதார ரீதியாகவும் பெரும் சரிவை சந்தித்துள்ளது தமிழ்நாடு.
இந்நிலையில் தமிழக பொருளாதார நிலை குறித்து பேசியுள்ள ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரங்கராஜன் “தமிழகத்தில் 2020-21க்கான பொருளாதார வளர்ச்சி 1.71% ஆக இருக்கும் என கணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சரிவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ள அதே சமயம் இரண்டு மாதங்களில் தமிழகத்தின் பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.