ரூ.6000 நிவாரண தொகை.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு

வியாழன், 14 டிசம்பர் 2023 (14:51 IST)
ரூ.6000 புயல் நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
 
 சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கான டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்பட்டு வரும் நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருவன
 
நிவாரணத் தொகை விநியோகத்திற்கு ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் நான்கு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்
 
வரும் ஞாயிற்று கிழமை முதல் நிவாரண தொகை வழங்க அறிவுறுத்தல்
 
ஞாயிற்று கிழமை தொடங்கி 7 நாட்களுக்குள் நிவாரண தொகையை வழங்க வேண்டும்
 
டோக்கன்களை ரேஷன் ஊழியர்கள் தான் நேரில் சென்று வழங்க வேண்டும், மூன்றாம் நபரை பணியில் ஈடுபடுத்த கூடாது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்