ரேஷன் கடைகளின் சிறப்பு பொது விநியோகத் திட்டம் நீட்டிப்பு!

வெள்ளி, 7 ஜனவரி 2022 (12:34 IST)
தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

 
இந்த திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் காலம் ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, நடப்பு ஜனவரி மாதம் முதல் வரும் மார்ச் மாதம் வரை சிறப்பு பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் இருக்கும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்