ரேபிட் கிட் கருவி கொரோனா பரிசோதனைக்கு ஏற்ற கருவி அல்ல என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய மருத்துவ கவுன்சில் இந்த கருவியை அடுத்த இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. ராஜஸ்தானில் இந்த கருவியால் செய்யப்பட்ட பரிசோதனைகள் தவறான முடிவை காட்டுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
உண்மையின் கொரோனா பரிசோதனைக்கு மூன்று விதமான கருவிகள் உள்ளது என்றும், ரேபிட் கிட் கருவி, எலிசா கருவி, மற்றும் கிளியா அருவி ஆகியவை என்றும் இந்த மூன்றில் ரேபிட் கிட் உலகம் முழுவதும் தோல்வி அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எலீசா மற்றும் கிளியா கருவிகள் ஓரளவு நம்பகத் தன்மையானது என்றும் இது மே மாதம் தான் நமக்கு கிடைக்கும் என்றும் டாக்டர் வேலுமணி தெரிவித்துள்ளார்