சுவாதி படுகொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை, சமீபத்தில் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது, சுவாதியை கொன்றது தான்தான் என்று அவர் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியானது. மூன்று நாட்கள் விசாரணைக்கு பின், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட்டார்.
சிறைக்காவல் முடிந்ததை அடுத்து, ராம்குமாரை மீண்டும் எழும்பூர் 14வது பெருநகர மேஜிஸ்திரேட் கோபிநாத் முன்னிலையில் நேற்று ஆஜர் படுத்த வேண்டியிருந்தது. ஆனால், ராம்குமாரை அழைத்து செல்லும் போது பொதுமக்களும், பத்திரிக்கையாளர்களும் கூடி விடுவதால், வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரை ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டனர்.
அதன்படி, நேற்று மாலை 5 மணியளவில், மாஜிஸ்திரேட் கோபிநாத் முன்பு, அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, எதாவது கூற விரும்புகிறார்களா? என்று ராம்குமாரை பார்த்து நீதிபதி கேட்டுள்ளார். ஆனால், அமைதியாக இருந்த ராம்குமார் “எதுவும் கூற விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.