பைக்கை பூட்டிட்டு வீட்டுக்குள்ள இருங்க.. புண்ணியமா போகும் – ராமதாஸ் வேண்டுகோள்

வியாழன், 2 ஏப்ரல் 2020 (10:42 IST)
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்கள் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றாமல் இருக்குமாறு ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் மக்கள் பலர் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை காரணமாக சொல்லி தொடர்ந்து சாலைகளில் சுற்றி வருகின்றனர்.

போலீஸார் மக்கள் சாலைகளில் சுற்றுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் மக்கள் நடமாட்டம் இருந்தபடியே உள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ”தமிழக இளைஞர்களால்தான் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். தயவுசெய்து உங்கள் இருசக்கர வாகனங்களை பூட்டிவிட்டு வீட்டிற்குள் இருங்கள். அதுவே நீங்கள் கொரோனாவை தடுக்க செய்யும் பெரும் தொண்டு” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்