இந்நிலையில் ராம மோகனராவ் வீட்டில் பல ஆவணங்கள், பணம், நகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை வைத்து அவரை கைது செய்யும் சூழல் நிலவியது இந்நிலையில் அவர் உடல் நலம் சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தலைமைச் செயலகத்தில் சோதனை செய்யவேண்டுமானால் முதலில் என்னை பணி மாற்றம் செய்துவிட்டுதான் சோதனை செய்ய வேண்டும். அதனைவிட்டு தலைமைச் செயலகத்திற்குள் சி.ஆர்.பி.எப் நுழைந்தது தமிழகம் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதைதான் காண்பிக்கிறது. இந்த சோதனையின் போது எங்கே சென்றது தமிழக அரசு?. இப்போதும் நான்தான் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்று கூறினார்.