ஆர்.கே.நகர் தேர்தல்: ரஜினியின் அதிரடி முடிவு!!

வியாழன், 23 மார்ச் 2017 (10:20 IST)
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி சசிகலா, ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்தது. இந்த பிரிவு தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரை வந்துள்ளது.


 
 
தேர்தல் ஆணையம் நேற்று அதிமுக மற்றும்  அதன் இரட்டை இலை சின்னத்தையும் யாரும் பயன்படுத்த கூடாது என அதிரடியாக அறிவித்தது. இன்று இரு அணிகளும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
 
இரு தினங்களுக்கு முன்னர் பாஜக வேட்பாளராக கங்கை அமரன் தேர்வு செய்யப்பட்டார். பாஜக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட பின் கங்கை அமரன் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பிற்கு பின்னர் ரஜினிகாந்த எனக்கு ஆதரவு அளிப்பார் என்பது போல கங்கை அமரன் பேட்டியளித்திருந்தார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ரஜினிகாந்த் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என கூறினார். தமிழிசையின் இந்த அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதனால் ரஜினிகாந்த ஆ.கே.நகர் தேர்தலில் பாஜக அணிக்கு ஆதரவு அளிப்பார் என பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், ரஜினிகாந்த எந்த அணிக்கும் ஆதரவு தரப்போவது இல்லை என அதிரடியாய் அறிவித்துள்ளார்.
 
இந்த அறிவிப்பு ரஜினிகாந்த ஆதரவு அளிப்பார் என எதிர்ப்பார்த்த கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்