எந்திரன் படத்தை 800 கோடிக்கு விற்க அரசியல் டிராமா - ரஜினியை விளாசும் ரசிகர்!

திங்கள், 15 பிப்ரவரி 2021 (12:24 IST)
ரசிகர்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி ரணகளமாக்கி விட்டார் என நீக்கப்பட்ட ரஜினி மன்ற நிர்வாகி புலம்பல். 

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்கப் போவது இல்லை என்றும் அரசியலில் குதிக்க போவதில்லை என்றும் உறுதிபட கூறி விட்டார். இருப்பினும் அவர் அரசியல் கட்சி தொடங்குவார் என கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் செய்தியை பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இதனை அடுத்து இவ்வாறு வதந்தியை பரப்பிய ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நான்கு நிர்வாகிகளை ரஜினி மக்கள் மன்ற அதிரடியாக நீக்கியுள்ளது. இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.ராஜா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, 
 
ரஜினி என்னை மட்டும் ஏமாற்றவில்லை, ஒட்டுமொத்த ரசிகர்களையும் மக்களையும் ஏமாற்றியுள்ளார். எந்திரன் படத்தை 800 கோடிக்கு விற்க அவர் காட்டிய தந்திரம் தான் அரசியல் கட்சி துவக்கம். கல்லா கட்டுவதில்தான் அவர் குறியாக இருந்தார். பொய்யாக மருத்துவமனையில் படுத்துக்கொண்டார் என கடுமையாக பேசியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்