ரஜினிக்கு பதவி வெறி... சீறும் ஜெயகுமார்!

வியாழன், 10 டிசம்பர் 2020 (13:42 IST)
ரஜினிக்கு இருக்கும் பதவி வெறி அவரை தூங்கவிடாமல் செய்வதால், கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் என ஜெயகுமார் பேச்சு. 
 
ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சியில் தொடங்கி அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்தார். டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் வரும் தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கூறினார்.   
 
மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி அவர்களும் தலைமை ஆலோசகராக தமிழருவி மணியன் அவர்களையும் அவர் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் ரஜினி குறித்து அமைச்சர் ஜெயகுமார் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா என்று கூற நான் ஜோதிடர் அல்ல, அரசியல்வாதி. ரஜினிகாந்துக்கு பதவி வெறி ஏற்பட்டுள்ளதாகவும், பதவி வெறி தூங்கவிடாமல் செய்வதால், கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். 
 
மேலும், எம்.ஜி ஆர்.பெயரை உச்சரித்தவர்கள் எல்லாம் எந்த நிலைக்கு சென்றிருக்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. எம்.ஜி.ஆர்., அதிமுகவுக்கே சொந்தம் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்