ரஜினி அரசியலுக்கு வருவது 99.99% வாய்ப்பில்லை. ஆர்.ஜே.பாலாஜி

சனி, 20 மே 2017 (00:57 IST)
சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து பேசாத ஆளே இல்லை என்ற அளவுக்கு இந்த டாபிக் தமிழ்நாட்டின் ஹாட் டாபிக்காக கடந்த ஒரு வாரமாக உள்ளது. டீக்கடை முதல் தலைமைச்செயலகம் வரை எங்கும் இதே பேச்சுதான். பலர் அவர் வருவார் என்றும் சிலர் இது வழக்கமான ஸ்டண்ட் என்றும் கூறி வருகின்றனர்.



 


இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்று முன்னணி ஊடகம் ஒன்றுக்கு நகைச்சுவை நடிகரும் சமூகநல ஆர்வலருமான ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார். அவர் ரஜினியின் அரசியல் குறித்து மேலும் கூறியதாவது:

அரசியலுக்கு வருவது காலத்தின் கையில்னு ரஜினி 25 வருஷமா சொல்லுவதை கேட்டாச்சு. நான் தீவிரமான சூப்பர் ஸ்டார் ரசிகன் என்ற முறையில் சொல்றேன். அவர் இப்ப அரசியலுக்கு வருவார்  என்ற நம்பிக்கை  எனக்கு இல்லை. அது போயிடுச்சு

ஆனால் அதே நேரத்தில் தனது புதிய படம் வரும் நேரத்தில் ஸ்டண்ட் செய்கிறார் ரஜினி என்று கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். யாராவது புது ஹீரோ இப்படிப் பண்ணினால் `ஸ்டன்ட்'னு சொல்லலாம். ஆனால், சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆச்சுன்னா, இந்தியா முழுவதும் உள்ள நியூஸ் சேனலில் 'why he is super star?'னு விவாதமே நடத்துறாங்க. `ஷாரூக் கான்கிட்ட இல்லாதது, அமீர் கான்கிட்ட இல்லாதது, சூப்பர் ஸ்டார்கிட்ட என்ன இருக்கு?'னு விவாதிக்கிறாங்க. அதனால, படம் ஓடவைக்கணும்னு ஸ்டன்ட் மாதிரி எனக்குத் தெரியலை. ஆனா, 99.99 சதவிகிதம் ரஜினி, அரசியலுக்கு வர மாட்டார் என்பது தான் என்னுடைய கணிப்பு' என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்