மோடிக்கும் வாழ்த்து, ஸ்டாலினுக்கும் வாழ்த்து! இதுதான் ரஜினி ஸ்டைலா?

வியாழன், 23 மே 2019 (21:43 IST)
மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியில் அமரப்போகும் பிரதமர் மோடிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் சில மணி நேரங்களுக்கு முன் வாழ்த்து கூறி 'சாதித்துவிட்டீர்கள்' என்று கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சற்றுமுன் தமிழகத்தில் சூப்பர் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க,ஸ்டாலினுக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.
 
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டரில், 'பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்துள்ளது.
 
ரஜினியை பலர் மோடி ஆதரவாளர் என்று கூறி வரும் நிலையில் அவர் மோடிக்கு வாழ்த்து கூறியதை பார்த்து யாரும் ஆச்சரியப்படவில்லை. ஆனால் விரைவில் கட்சி ஆரம்பித்து, ஸ்டாலின் முதல்வராவதை தடுப்பார் என்று கூறப்படும் ரஜினிகாந்த், ஸ்டாலினுக்கும் வாழ்த்து கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

— Rajinikanth (@rajinikanth) May 23, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்