மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னிலைப் பெற்று தனிப்பெரும்பாண்மையாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றிப் பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்புக்கட்சிகளான மாநிலக் கட்சிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நீக்கம் என பாஜக ஆட்சியின் தோல்வி திட்டங்கள் மீதும் மக்கள் அதிருப்தியில் இருந்தும் பாஜக தனிப்பெரும்பாண்மையாக ஆட்சி அமைத்து இருப்பது இந்தியா முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து பாஜகவின் வெற்றியைப் பார்த்து மோடியே மக்களிடம் எதனால் எங்களை வெற்றிப்பெற வைத்தீர்கள் கேட்பது போல் பதிவு ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.
’எதுடா செல்லம் என்கிட்ட உன்னை ஹெவியா லைக் பண்ண வெச்சது?
ஜி.எஸ்.டி.ங்குற பேர்ல கோவணத்தை உருவி ரோட்டுல விட்டனே அதுவா...
500,1000-த்தை செல்லாம ஆக்கி ஏ.டி.எம் ல நிற்கவெச்சு சாவடிச்சனே அதுவா...
கோமாதா கறி திண்ணவனை எல்லாம் குமட்டுலயே குத்தினேனே அதுவா...
அடானிக்கு பாதி, அம்பானிக்கு பாதின்னு நாட்டை வித்தனே அதுவா...
அக்லக்கை கொன்னு, ஆசிபாவை சிதைச்சு, லோயாவை பரலோகம் அனுப்பி வெச்சனே அதுவா...
ஒருவேளை சிபிஐ-யை சீரழிச்சு, சுப்ரீம் கோர்ட்டை சூப் போட்டனே அதுவா இருக்குமோ?
எதுவா இருக்கும்?’