நான் அரசியல்வாதி அல்ல, இனிமேல் என்னை தடுக்காதீர்கள்: ரஜினிகாந்த் வேண்டுகோள்!

சனி, 25 மார்ச் 2017 (15:33 IST)
லைக்கா நிறுவனம் சார்பில் இலங்கையில் வவுனியாவில் உள்ள தமிழர்களுக்கு வீடுகளை வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு வீடுகளை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் நிலவிய எதிர்ப்பு காரணமாக இலங்கை பயணத்தை ரஜினி தற்போது ரத்து செய்துள்ளார்.


 
 
திருமாவளவன், வைகோ, வேல்முருகன் போன்றோர் நான் இலங்கை செல்லக்கூடாது என கூறிய காரணங்களை முழுமனதோடு என்னால் ஏற்கமுடியவில்லை என்றாலும் அவர்களது அன்பு வேண்டுகோளை ஏற்று நான் இந்த பயணத்தை ரத்து செய்கிறேன் என கூறியுள்ளர் ரஜினிகாந்த்.
 
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். நான் அரசியல்வாதி அல்ல, நான் ஒரு கலைஞன், மக்களை மகிழ்விப்பது தான் என்னுடைய கடமை.
 
இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து அவர்களை மகிழ்வித்து, அந்த புனிதப் போர் நிகழ்ந்த பூமையை காணும் பாக்கியம் கிடைத்தால், தயவு செய்து அதை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்துவிடாதீர் என்று கேட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்