500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் வாபஸ் வாங்கப்படுகிறது. நேற்று இரவு இந்திய பிரதமர் மோடி இந்திய அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இன்று முதல் இந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகாது. அதற்கு பதிலாக புதிய வடிவிலான 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
தங்கள் கையில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. கருப்பு பணத்தை மீட்கவும், கள்ள பணத்தை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.