இதனை அடுத்து திராவிடர் விடுதலை கழகத்தினர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ரஜினி மீது புகார் அளித்தனர். புகார் அளித்த ஒரு சில நாட்களிலேயே அந்த புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இதுகுறித்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்றது. ரஜினிகாந்த் அவர்கள் பெரியார் குறித்து பேசியதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும் எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்றும் ரஜினி தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். ஆனால் ரஜினிகாந்த் பேசியது உண்மைக்கு புறம்பானது என்றும் எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் திராவிடர் விடுதலை கழக வழக்கறிஞர் வாதாடினார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்த உத்தரவை இன்று பிறப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பில் உமாபதி தாக்கல் செய்திருந்த ரஜினி மீதான வழக்கை எழும்பூர் நிதிமன்றம் தற்போது நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது.
மேலும், இடையீட்டு மனுவை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தியும், ரஜினி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய உமாபதியின் மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி உத்தரவிட்டுள்ளது.