மிளகு, பூண்டு, சுக்குடன் ரசம் செய்து குடித்தால் கொரோனா செத்துவிடும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:57 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வந்த நிலையில் தற்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துள்ளது 
 
மேலும் விரைவில் தமிழக மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடவும் திட்டமிடப்பட்டுள்ளதால், இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தை விட்டு கொரோனா சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் சித்த வைத்திய முறையிலும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் மிளகு பூண்டு சுக்கு உடன் ரசம் செய்து குடித்தால் கொரோனா வைரஸ் செத்துவிடும் என்று கூறியுள்ளார்
 
அமைச்சரின் இந்த கருத்துக்கு பாராட்டுக்களும் கிண்டல்களும் மாறி மாறி கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்