சென்னை, ராயபுரத்தில் 53-வது வார்டில் மின்வெட்டுக் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரத்தில் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள மிந்தடையால் மெழுகுவர்த்தி ஒளியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினத்தில் மின்தடை காரணமாக செல்ஃபோன் ஒளியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கடலூர், பந்தலூர், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப் பூண்டியிலும் கனமழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் வாக்குப்பதிவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தேனி, ஜெயங்கொண்டம், பகுதியில் மழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து பெய்துவருவதால் 14 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.