பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும் புதிய கல்விக் கொள்கையை வடிவமப்பதற்கான திட்டக்குழுவை அமைத்தது. இந்த குழு 2016 ஆம் ஆண்டு தனது வரைவை மத்திய அரசிடம் அளித்தது. அந்த வரைவில் கல்வியில் தனியார் மயத்தை ஊக்குவித்தல், கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதன் மூலம் கல்லூரிக் கட்டணங்களை அதிகமாக்குதல், கல்வி சம்மந்தமாக கல்லூரிகள் எடுக்கும் விவகாரங்களில் அரசோ, நீதித்துறையோ தலையிடாது இருத்தல் போன்றவற்றை பரிந்துரை செய்தது.
இதையடுத்து மத்திய அரசு மீண்டும் மும்மொழிக் கொள்கையைக் கொண்டுவரப்பார்க்கிறது என்றும் இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின்னர் மூக வலைதளங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கியுள்ளனர் நெட்டிசன்கள் .#stop_Hindi_imposition எனும் அந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரண்ட்டும் ஆக்கப்பட்டது..
இது மாதிரியான பலத்த எதிர்ப்புகளால் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன் படி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக்கப்படாது எனவும் இந்தியும் ஒரு தேர்வு மொழியாகத்தான் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. அதன் படி அந்தந்த மாநிலம் விரும்பும் மொழிகளை மூன்றாவது மொழியாக தேர்வு செய்துகொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. ஆனாலும் மும்மொழிக் கொள்கையே மறைமுகமான இந்தி திணிப்புதான் அதனால் இருமொழிக் கொள்கையேப் போதுமானது எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.