சென்னை மருத்துவ கல்லூரியில் ராகிங் கொடுமை! மாணவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த நிர்வாகம்!

Prasanth Karthick

புதன், 4 டிசம்பர் 2024 (09:14 IST)

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 

 

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் மருத்துவத்தின் பல்வேறு பிரிவு படிப்புகளை படித்து வருகின்றனர். மாணவ, மாணவியரின் வசதிக்காக இங்கு இருபாலர் தங்கும் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களை மூன்றாம் ஆண்டு சீனியர் மாணவர்கள் ஹோம் வொர்க் எழுதச் சொல்லி ராகிங் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த ராகிங் விவகாரம் குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், காவல்துறை உதவி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்தது உறுதியான நிலையில், ராகிங்கில் ஈடுபட்ட 3 சீனியர் மாணவர்களையும் 6 மாதங்கள் விடுதியில் இருந்து நீக்கியும், தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்