மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் - ராதாகிருஷ்ணன் பேட்டி

புதன், 11 ஆகஸ்ட் 2021 (12:32 IST)
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி.

 
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து மூன்றாவது அலை வந்து விட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தான் 2வது அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் 3வது அலை ஆகஸ்டில் தொடங்கி அக்டோபரில் உச்சம் அடையும் என்று மருத்துவ வல்லுநர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர். 
 
இந்நிலையில் சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இது குறித்து பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.  கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட்டால் கொரோனா பரவும் ஆபத்து ஏற்படும். தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனாவால் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்