சட்டவிரோத பண பரிவர்த்தனை! ஆஜராக அவகாசம் கேட்கும் செந்தில் பாலாஜி!

புதன், 11 ஆகஸ்ட் 2021 (11:05 IST)
வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக ஒரு மாத காலம் அவகாசம் கேட்டுள்ளார்.

முன்னதாக அதிமுகவில் இருந்து பின்னர் அமமுக மாறி, அதன்பின்னர் கடைசியாக திமுகவில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் வென்று அமைச்சரானவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக 81 பேரிடம் ரூ.1.62 கோடி பண மோசடி செய்ததாகவும், முறைகேடாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் உள்ளிட்ட பணிகளின் காரணமாக தற்போது ஆஜராக இயலாது என்றும் ஆஜராக ஒரு மாதகாலம் அவகாசம் அளிக்குமாறு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்