தமிழகத்தின் தலைமைக் கணக்காயராக ஆர்.திருப்பதி வெங்கடசாமி நியமனம்

வெள்ளி, 30 மார்ச் 2018 (07:39 IST)
தமிழகத்துக்கான புதிய பொது கணக்காயராக ஆர்.திருப்பதி வெங்கடசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில கணக்காளர் அலுவலகத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த அருண் கோயல் என்பவர் மாநில தலைமை கணக்காளராக பதவி வகித்து வந்தார்.  சுமார் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை நியமனம் செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், இவர் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமன ஆணையை வழங்கியதாகவும் புகார் எழுந்தது. 
 
திருவண்ணாமலையை சேர்ந்த நபர் ஒருவருக்கு பணி வழங்க அருண் கோயல், 5 லட்சம் லஞ்சம் வாங்கும் போது சி.பி.ஐ அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்தனர். 
இதனையடுத்து மாநில தலைமை கணக்காளர் அருண் கோயல், அவருக்கு உதவிய கஜேந்திரன், சிவலிங்கம், எல்.எஸ்.ராஜா ஆகிய நால்வரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். 
 
இந்நிலையில் தமிழகத்துக்கான சி.ஏ.ஜி.யின் புது பொது கணக்காயராக ஆர்.திருப்பதி வெங்கடசாமி நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். இவர் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து இந்திய தணிக்கை மற்றும் கணக்குகள் பணியில் இருக்கிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்