சென்னை இராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலம் காட்ந்த வாரம் திறக்கப்பட்டது. அப்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எதிர்வரும் 2020 சட்டமன்ற தேர்தலில் அமமுக தலைமையில் பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறினார்.
மேலும் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் சசிகலா சிறையிலிருந்து விடுதலையாவார் என்றும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனவும் கூறினார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த புகழேந்தி.
அவர் கூறியதாவது, சசிகலா சிறையில் இருந்து வந்தால் எந்த மாற்றமும் ஏற்படாது. தினகரன் சசிகலாவை பிளாக் மெயில் செய்கிறார். சிறையில் சசிகலாவை யாரையும் சந்திக்க விடுவதில்லை. தினகரன் ஒரு ஃபிராடு. சசிகலாவின் பணத்தை கொள்ளையடிக்க டிராமா செய்து வருகிறார்.