முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர் ஜெயகுமார் அதிர்ச்சி கருத்து!

புதன், 12 ஆகஸ்ட் 2020 (13:17 IST)
அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து ஏற்கனவே ஒரு சில அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ள நிலையில் தற்போது அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்கு பின் முடிவு செய்வோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ’எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் முதல்வர்’ என்று தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் தற்போது அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது ’அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சி உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார்
 
முதல்வர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என்றும் இது குறித்து யாரும் கருத்து சொல்லாமல் இருந்தால் நல்லது என்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர்களின் கருத்து கட்சியின் கருத்தாக இருக்காது என்றும் இந்த நேரத்தில் நான் கருத்துச் சொல்வது ஆரோக்கியமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சுமூகமான முடிவு எடுக்கப்படும் என்றும் கட்சி சின்னத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திப்போம் என்றும் கூறினார் அமைச்சர் ஜெயக்குமார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்