பொன்னமராவதியில் 144 வாபஸ் – இயல்புநிலைக்கு திரும்பிய புதுக்கோட்டை !

திங்கள், 22 ஏப்ரல் 2019 (14:12 IST)
பொன்னமராவதியில் இரு சமூகத்தினருக்கு இடையில் நடந்த மோதலால் 3 நாட்களாக விதிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தேர்தலுக்குப் பின்னர் வெளியான ஒரு வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ பதிவால் இருப் பிரிவினருக்கு இடையில் மோதல் வெடித்தது. இதில் மோதலைத் தடுக்க வந்த காவல்துறை, போலீஸ் ஸ்டேசன் மற்றும் காவல்துறையின் வாகனங்களும் தாக்கப்பட்டன.

இதையடுத்து புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள 49 கிராமங்களில் கடந்த 3 நாட்களாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சித்தலைவர் பிறப்பித்திருந்தார்.  மேலும் 800 போலிஸார் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கலவரம் சம்மந்தமாக சுமார் 1000 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் இயல்பு வாழக்கை முடங்கியதை அடுத்து நேற்று முதல் பொன்னமராவதிப் பகுதியில் கடைகள் திறக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதனால் இன்று முதல் 144 தடை உத்தரவைத் திரும்ப பெறுவதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்