ஏப்ரல் 30ம் தேதி வரை அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு; தமிழகத்திற்கு சிக்கலா?

திங்கள், 26 ஏப்ரல் 2021 (21:50 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அனைத்து மதுக்கடைகளையும் மூட புதுவை அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை அடுத்து அம்மாநில அரசு ஏற்கனவே சனி ஞாயிறு முழு ஊரடங்கு என்றும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு என்றும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஏப்ரல் 30ஆம் தேதி வரை அனைத்து வகை மதுக் கடைகளையும் மூட உத்தரவிட்டு உள்ளது 
 
இதனை அடுத்து மதுக்கடைகள், சாராய கடைகள், கள்ளுக் கடைகள் ஆகியவற்றை மூடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் உத்தரவை மீறி மது கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. இதனால் புதுவை மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
புதுவையில் அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவிட்டு உள்ளதால் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதுவையில் இருந்து வந்து மது வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தமிழகத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்