தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பொது தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நடைபெறும் மூன்று வகுப்பு பொது தேர்வுகளுக்கும் ப்ளூபிரிண்ட் எனப்படும் பாட மதிப்பெண் ஒதுக்கீடு கிடையாது என்றும், புத்தகத்தின் எந்த பகுதியிலிருந்தும் எப்படி வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படும் என்று கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ப்ளூபிரின்ட் முறையை நீக்குவதால் முழு மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என்றும், முழு புத்தகத்தையும் படித்து புரிந்து கொள்ள முடியாத மாணவர்கள் பெருமளவில் தேர்ச்சியடையாமல் போக வாய்ப்பிருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.