கேரளா போல் கிராமங்களுக்கும் இணைய வசதி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்..!

புதன், 16 ஆகஸ்ட் 2023 (12:58 IST)
கேரளாவில் கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களுக்கும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக  தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல்ராஜன் தெரிவித்தார். 
 
மேலும் இந்த ஆண்டுக்குள் 75 சதவீதம் பேருக்கு 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.  
 
சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் சம விருந்தில் பங்கேற்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதன் பின்னர் செய்தியாளர்களிடம்  ஒவ்வொரு கிராமத்திலும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்