தமிழக அமைச்சரவையில் மாற்றமா? நீக்கப்படும் அமைச்சர்கள் யார் யார்?

ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (11:09 IST)
தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடைபெற இருப்பதாகவும் ஒரு சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு ஒரு சில புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் அமைச்சரவையில் சில மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நீக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
அதேபோல் ஒருசில அமைச்சர்கள் மீது மேலிடம் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களின் துறை மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. 
 
இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக அமைச்சரவை மாற்றப்படும் என்றும் அப்போது நீக்கப்படும் அமைச்சர்கள் யார்? புதிய அமைச்சர்கள் யார்? என்பது குறித்த தகவல் புரியவரும் என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்