மருத்துவ பரிசோதனயில் தோல்வி அடைந்தால் டிரைவர்களுக்கு வேறு பணி.. தமிழக அரசு அறிவிப்பு..!

புதன், 26 ஏப்ரல் 2023 (14:04 IST)
அரசு வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் மருத்துவ பரிசோதனையில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு வேறு பணிகள் கொடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
தமிழக அரசின் வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கண் காது உள்ளிட்ட மருத்துவ பரிசோதனையில் டிரைவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் ஒருவேளை தோல்வி அடைந்தால் அவர்களுக்கு டிரைவர் பணிக்கு பதிலாக வேறு பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
50 வயதுக்கு குறைவானவர்களுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்