ஊராட்சிகளை பேரூராட்சி,நகராட்சிகளுடன் இணைப்பதற்கு கண்டன போராட்டம்!

J.Durai

புதன், 12 ஜூன் 2024 (13:54 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட ஊராட்சி பஞ்சாயத்துகளை, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம ஊராட்சி தலைவர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சிகளின் தலைவர்கள்  நல அமைப்பு  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.  
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஊராட்சிகளை பேரூராட்சிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுடன் இணைக்க போவதாக அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியானது தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
 
இந் நிலையில் தற்போது மாவட்டத்தில் உள்ள 95 பஞ்சாயத்துகளில் 40 பஞ்சாயத்துகளை பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சி உடன் இணைக்க போவதாக வந்த அறிவிப்பை அடுத்து இன்று மாவட்ட முழுவதும் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் ஊராட்சி உறுப்பினர்கள், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன் தரும் பயனாளிகள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் நாகர்கோவில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
பஞ்சாயத்துகளை பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைப்பதால் வீட்டு வரி உயர்வு மின் கட்டண உயர்வு தண்ணீர் வரி உயர்வு கொண்ட பல்வேறு வரி உயர்வுகளை சந்திக்க வேண்டிவரும் அதோடு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை குறையும் என்பது போன்ற பல்வேறு காரணங்களால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்