கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

திங்கள், 29 மே 2017 (21:55 IST)
தமிழக அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையை அடுத்து தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


 

 
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் 350 சிறு மற்றும் குறு குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த உற்பத்தி நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதாக அரசு சில நிறுவனங்களுக்கு சீல் வைத்தது.
 
இதைத்தொடர்ந்து மத்திய அரசு குடிநீர் கேன் மீது 18 சதவீதம் சரக்கு சேவை வரி விதித்துள்ளது. இதனால் மாநில மற்றும் மத்திய அரசை கண்டித்து நேற்று முதல் தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
 
கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தினால் இன்று சென்னையில் சில இடங்களில் கேன் குடிநீரை தினமும் பயன்படுத்துபவர்கள் சற்று பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை. இந்நிலையில் இவர்களின் இந்த போராட்டம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக அரசு அவர்களிடம் போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியது.
 
இதையடுத்து தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.  

வெப்துனியாவைப் படிக்கவும்