காரில் சீட் பெல்ட் அணியாததற்கு மன்னிப்பு கேட்ட பிரதமர் ரிஷி சுனக்!

வெள்ளி, 20 ஜனவரி 2023 (22:59 IST)
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் கடந்தாண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராகப் பதவியேற்றார்.

இதையடுத்து, அவர் மக்களுக்கு பல திட்டங்கள் அறிவித்து, நாட்டின் பொருளாதார நெருக்கடியை போக்க முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

அந்த நாட்டில் போக்குவரத்து விதிகள் கடுமையாகப் பின்பற்றி வரும்  நிலையில் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில்,  இங்கிலாந்தில் 100 க்கும் மேற்பட்ட திட்டங்கள் பற்றி பொதுமக்களிடம் அறிமுகப்படுத்த  வடமேற்கு இங்கிலாந்தில் வீடியோ எடுக்கப்பட்டது, அதில், காரில் பயணித்தபடி, ரிஷி சுனக் பேசினார். ஆனால் அவர் ஷீட் பெல்ட் போடவில்லை. எனவே இதுகுறித்து கேள்வி எழுப்பட்டு, அந்த வீடியோ வைரலானதால், இதற்கு ரிஷி சுனக் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்