பாதுகாப்பு படை வீரர்கள் விஷயத்தில் பிரதமர் மோடி மிகவும் உணர்வுபூர்வமாக இருப்பார்- புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு...

J.Durai

செவ்வாய், 22 அக்டோபர் 2024 (11:11 IST)
சென்னை மண்டல முப்படையினர் கணக்கு தணிக்கை ஆணையர் சார்பில் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள அப்துல் கலாம் அரங்கத்தில் ஸ்பார்ஷ் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும்
ஸ்பர்ஸ் திட்டத்தின் மூலமாக ஓய்வூதியம் பெறுவதில் இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டு ஓய்வூதிய நிலுவைத் தொகை பெறும் முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு துணை நிலை ஆளுநர் காசோலைகள் வழங்கினார்.
 
தமிழ்நாடு -புதுச்சேரி கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயசீலன், இந்திய கப்பற்படையின் இணை அட்மிரல் ரவிகுமார் திங்ரா, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் குடும்பத்தினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 
முன்னதாக
விழாவில் பேசிய துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன்.....
 
பிரதமர் மோடி உடன் 8-வருடம் பணியாற்றியுள்ளேன். பாதுகாப்பு படை வீரர்கள் விஷயத்தில் பிரதமர் மிகவும் உணர்வுபூர்வமாக இருப்பார்.  குஜராத்தில் தீபாவளி பண்டிகை மிக பிரமாண்டமாக கொண்டாடப்படும். இந்த நிலையில் பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது அவர் ஒவ்வொரு தீபாவளி பண்டிக்கையும் பாதுகாப்பு படை வீரர்களுடன் தான் கொண்டாடுவார். அவர் பிரதமர் ஆன பின்பும் பாதுகாப்பு படை வீரர்களுடன் தான் கொண்டாடுகிறார். அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்வார் என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்