மு.க.ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு: ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார்!

வியாழன், 30 ஜூன் 2022 (17:38 IST)
எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்கா இன்று சென்னை வந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு திரட்டினார்
 
இன்று சென்னை அண்ணா அறிவாலயம் வந்த யஷ்வந்த் சின்கா, முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கேட்டார். இதனை அடுத்து அவர் அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரையும் சந்தித்து ஆதரவு கேட்டார். அதற்கு திமுக கண்டிப்பாக ஆதரவு தருவதாக உறுதி அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார் என்பதும் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்