குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு

புதன், 29 ஜூன் 2022 (17:16 IST)
குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 
 
தற்போது துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு அவர்கள் இருந்துவரும் நிலையில் அவரது பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ளது 
 
இந்த நிலையில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் ஜூலை 5 என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 19 என்றும், வேட்புமனு பரிசீலனை ஜூலை 20 என்றும், வேட்புமனுவை திரும்பப் பெற ஜூலை 22 கடைசி நாள் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்