”எங்கள் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை”; பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

Arun Prasath

வியாழன், 13 பிப்ரவரி 2020 (10:15 IST)
பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக-தேமுதிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் 20 ஆம் ஆண்டு கொடி நாள் விழா, நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துக்கொண்டு பேசினார்.

அதில், “குட்ட குட்ட தேமுதிக குனிந்துக் கொண்டிருக்கிறது, நிமிர்ந்தால் யாராலும் தாங்கமுடியாது என கருத்து தெரிவித்திருந்தேன். உடனே கூட்டணிக்குள் விரிசல் என்று பரப்பி விட்டார்கள். எங்கள் கூட்டணியில் என்றும் விரிசல் வராது. நாங்கள் கூட்டணி தர்மத்தை மதிப்பவர்கள். இதனை கூட்டணியில் உள்ளவர்களும் பின்பற்றவேண்டும் என்று தான் அவ்வாறு கூறினேன்” என விளக்கம் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்