இந்நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபிரன்ஸில் பிரேமலதா, ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி வைத்துவைத்து, கூட்டணி கட்சிகளுக்கு தான் பலன் கிடைக்கிறது. தேமுதிக கட்சிக்கோ அல்லது தேமுதிக தொண்டர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை.
இனி வரக்கூடிய தேர்தல்களில் தேமுதிக வெற்றி பெறவேண்டும். நம் நிர்வாகிகள் வெற்றி பெறவேண்டும் என்ற விதத்தில் வியூகம் அமையுங்கள் என பேசியுள்ளார். தற்போது கூட்டணியில் உள்ள அதிமுக - பாஜகவிற்கு இடையே மோதல் சூழல் உள்ளதால், இந்த கூட்டணி அடுத்த தேர்தலுக்கு நிலைக்காது என கூறப்படுகிறது.