இனிமேல் தனித்து போட்டியிட மாட்டோம்: பிரேமலதா விஜயகாந்த்

திங்கள், 9 ஜனவரி 2023 (12:55 IST)
இனிமேல் தேமுதிக தனித்துப் போட்டியிடாது என்றும் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியுடன் இணைந்து தேமுதிக தேர்தலை சந்திக்கும் என்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
 விருதுநகரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரேமலதா அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அப்போது ’தேர்தல் கூட்டணி குறித்து செயற்குழு மற்றும் பொதுக் குழுவைக் கூட்டி ஆலோசனை செய்வோம் என்றும் அதன்பிறகு தலைவர் விஜயகாந்த் கூட்டணி குறித்த முடிவை தெரிவிப்பார் என்றும் கூறினார் 
 
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைப்போம் என்றும் தேர்தலில் இனிமேல் தனித்து போட்டியிட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் திமுக மீது பல்வேறு கண்டனங்கள் தெரிவித்த அவர் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களையும் ஆட்சியை பிடிப்பது போல் தமிழகத்திலும் ஆட்சி செய்ய பாஜக நினைக்கிறது என்று கூறினார். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்