முதல்வர் படம் இல்லாத பூஜை : கரூர் அதிமுகவினரிடையே சலசலப்பு

ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (13:08 IST)
தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்கள் பூரண குணமடைய வேண்டி ஆங்காங்கே அ.தி.மு.க வினர் பூஜைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு பூஜைகள் மற்றும் கோ பூஜைகள், விஷேச யாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளில் முதல்வரின் ஜெயலலிதா படம் இடம் பெறவில்லை.


 

 
காரணம், போக்குவரத்து துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்மாவின் படம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அ.தி.மு.கவினரிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று முதல்வர் ஜெயலலிதாவிற்காக நடத்தப்பட்ட தன்வந்திரி யாகம், மஹா விஷ்ணு, மகா பிரம்மா யாகங்களும் பின்பு அதைத்தொடர்ந்து கோ பூஜைகளும் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில் அ.தி.மு.க அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் செயலாளர் வி.செந்தில்நாதன், கரூர் மாவட்ட மாணவரணி தலைவர் வீரக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


 

 
மேலும் தமிழக அளவில் ஆங்காங்கே நடத்தப்படும் பூஜைகளில் முதல்வரின் படத்தோடு மற்ற அமைச்சர்கள் வலம் வரும் வேளையில் இந்த போக்குவரத்து துறை அமைச்சரின் செயல்பாடு  அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும் இந்த யாகங்களால் ஒரு வேளை அரவக்குறிச்சியில் நடைபெறும் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி வெற்றி பெற்று விடுவாரோ, அப்படி வெற்றி பெற்றால், அவரது பதவி பறிக்கப்பட்டு, செந்தில் பாலாஜிக்கு சென்று விடுமோ என்று யோசித்து அப்படி செய்திருக்கலாம் என கரூர் மாவட்ட அ.தி.மு.கவினர் முனுமுனுத்து வருகின்றனர்.
 
சி. ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்

வெப்துனியாவைப் படிக்கவும்