பள்ளிப் பாடத்தில் நடிகர் சிவாஜி கணேசனுக்குப் புகழாரம் - பிரபல இயக்குநர் அறிக்கை..

வியாழன், 6 ஜூன் 2019 (14:28 IST)
நடிகர் திலகம் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன். பராசக்தியில் அறிமுகமான சிவாஜி முதல் படத்தில் அவர் பேசிய முதல் வசனம் சக்சஸ். அந்த வார்த்தை போலவே அவரது வாழ்க்கையும் சினிமாவும் சக்சஸாகவே திகழ்ந்தது.
தழிழ் சினிமாவில் நடிப்புச் சூத்திரத்தை தன் உணர்ச்சிகரமான குரலில், நடையில் ,உடையில், பாவனையில், நடிப்பில், அசைவில், பேச்சில் பதிவு செய்து சினிமாவின் மூலமாகவே இன்றும் மக்களிடம், அவரது ரசிகர்களிடம் வாழ்ந்துகொண்டிருப்பவர் சிவாஜி கணேசன்.
 
நடிகர் திலகத்தைப் பற்றியும். அவருடனான தான் பழகிய தருணங்கள், கலையுலக அனுபவங்கள் ஆகியவற்றைத் திரட்டி மலையாள எழுத்தாளர் பாலசந்திரன் , ’சிதம்பர நினைவுகள் என்ற நூலை வெளியிட்டார்.
 
இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு புதிதாக தயாரித்துள்ள பாடத்திட்டத்தில், மேல் நிலை இரண்டாம் ஆண்டு பாடத்தில் நடிகர் சிவாஜிக்கு புகழாரம் சூட்டும் விதமாக மேற்கூறிய சிவாஜியைக் குறித்த செய்திகள் இடம்பெறச்செய்துள்ளது.
இந்நிலையில் இயக்குநர் இமயம் என்றழைக்கப்படும் பாரதிராஜா இதுகுறித்து நன்றி தெரிவித்துள்ளார். அதில் மாணவர்கள் சிவாஜி கணேசனைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், அவரது கலைத்திறனை நன்கறியவும் பாடநூலில் சிவாஜியை குறித்த செய்திகளை பாடநூலில் இடம்பெறச் செய்த தமிழக அரசுக்கு நன்றி கூறுகிறேன்! இவ்வாறு  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்