பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பின், நேற்று முன்தினம் இரவு, மின் உற்பத்திக்காக ஆயத்த பணிகள் துவங்கின. நேற்று காலை, 100 மெகாவாட்டில் துவங்கிய மின் உற்பத்தி, படிப்படியாக அதிகரித்தது. மாலை, 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இன்று, புது அனல்மின் நிலையம் இலக்கான, 600 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.