கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற, தமிழக சட்டசபை தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அலுவர்கள் மற்றும் காவலர்கள் அளித்த தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எட்டு மணிக்கு எண்ணப்படுகிறது. அதன்பின், மற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. மொத்தம் 68 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது.
சரியாக இன்று காலை எட்டு மணிக்கு தபால் ஒட்டுகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. அதில் திமுக 36 தொகுதிகளிலும், திமுக 25 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. குறிப்பாக திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி 4000 வக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.