3 ஆண்டுகள் சிறை தண்டனை.. நூலிழையில் தப்பித்த பொன்முடி..!

வியாழன், 21 டிசம்பர் 2023 (11:01 IST)
அரசியலமைப்புச் சட்டப்படி மூன்று ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை பெற்றால் மட்டுமே தண்டனையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அந்த வகையில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததால் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு மாதம் அதிக சிறை தண்டனை கிடைத்திருந்தால் கூட அவர் தண்டனை நிறுத்தி வைக்க முடியாது என்பதால் அவர் நூலிழையில் இப்போதைக்கு தப்பித்துள்ளார் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 
 
3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தண்டனையை நிறுத்தி வைக்க மட்டுமே வாய்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி  குற்றவாளி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது பதவி உடனடியாக பறிபோனது.  
 
இந்த நிலையில் தங்களது தண்டனையை குறைக்க வேண்டும் என்று பொன்முடியின் மனைவி கோரிக்கை வைத்த நிலையில் இதுகுறித்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில் வைக்க நீதிபதி அறிவுறுத்தி  உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்