பொங்கல் பரிசுத்தொகுப்பு: இன்று முதல் டோக்கன் வினியோகம்...! ரொக்கம் ரூ.1000 எப்போது?

Mahendran

ஞாயிறு, 7 ஜனவரி 2024 (09:53 IST)
தமிழக அரசு பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம் மற்றும் முழு கரும்பு தருவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த பொருட்கள் தருவதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் பச்சரிசி சர்க்கரை முழு கரும்பு  ஆகியவை வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ALSO READ: ராமர் கோவில் திறக்கும்போது முஸ்லீம்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்: சர்ச்சை பேச்சு
 
அதன் பிறகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொங்கல் தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் பொங்கல் தொகுப்பு பொருள்களுக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் என்றும்  அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் தரப்படுமா அல்லது ஆயிரம் ரூபாய் தனியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்