கொரோனாவில் இருந்து குணமானார் பொன்னார்: பாஜகவினர் வாழ்த்து!

வியாழன், 13 மே 2021 (15:11 IST)
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணமாகி வீடு திரும்பியுள்ளார் 
 
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கடந்த மாதம் முழுவதும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர் தீவிர பிரச்சாரம் செய்த நிலையில் கடந்த 6ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் 8 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்ற அவர் தற்போது அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்து உள்ளது. இதனை அடுத்து அவர் குணமடைந்து வீடு திரும்பினார். பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கொரோனாவில் இருந்து குணமானதை அடுத்து அவருக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்